எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்கும் "நோட்டா' முறை, இந்த மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தபட உள்ளது.
தேர்தலின்போது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்கும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தான் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்காத பட்சத்தில் வாக்காளர்கள் அந்த பொத்தானை அழுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் "நோட்டா' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் இந்த முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment