Tuesday, 23 July 2013
Thursday, 11 July 2013
தி.மு.க - வில் இணைந்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் சித்தாய்மூர் ஊராட்சியில் அதிமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்தனர். சித்தாய்மூர் அம்மா பேரவை கிளை செயலாளர் மாரி என்கிற அன்பழகன் மற்றும் 3 வார்டு உறுப்பினர் ராணி ஆகியோர் அதிமுக விலிருந்து விலகி நாகை மாவட்ட கழக செயலாளர் விஜயன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். இதில் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் சரவணகுமார், சுப்ராயன், ராமமூர்த்தி, சண்முகநாதன், முருகானந்தம், ராஜ், சிவசங்கரன், துரைசிங்கம், ரவி, ராமசந்திரன், சிவானந்தம், சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழுதடைந்த மின்கம்பம்----- தலைஞாயிறு....
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் உடைந்துஇ கீழே விழும் அபாய மின்கம்பத்தை உடனே மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் 13 வது வார்டில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த மின்கம்பம் கடும் மழையாலும்இ காற்றிலும்இ இவரை விழாமல் தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறது. பழுதடைந்த மின்கம்பம் அக்ரஹாரம் மெயின்ரோட்டில் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவஇ மாணவிகளும்இ பொது மக்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அந்த பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்துள்ளனர்.
Subscribe to:
Comments (Atom)


