நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் உடைந்துஇ கீழே விழும் அபாய மின்கம்பத்தை உடனே மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் 13 வது வார்டில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த மின்கம்பம் கடும் மழையாலும்இ காற்றிலும்இ இவரை விழாமல் தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறது. பழுதடைந்த மின்கம்பம் அக்ரஹாரம் மெயின்ரோட்டில் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவஇ மாணவிகளும்இ பொது மக்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அந்த பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்துள்ளனர்.

No comments:
Post a Comment