Tuesday, 25 June 2013

இயற்கையின் சீற்றமும் மனிதனின் தவறும்

உத்தரகாண்டத்தில் இயற்கை சீறியெழுந்தது. இது வரை 190 பேர் மாண்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருக்கக் கூடும் என்று செய்திகள் கூறுகின் றன. சீறும் வெள்ளம் அடித் துச் செல்லப்பட்ட உடல்களின் எண்ணிக்கை தெரியவில்லை. கேதார்நாத்தை புரட்டி எடுத்த வெள்ளத்தால் அடித்துச் செல் லப்பட்ட நாற்பது உடல்கள் ஹரித்துவாரில் கிடைத்துள் ளன என்ற செய்தி இதை உறு திப்படுத்துகிறது. பல ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் அழிந்து விட்டன. இருபதுக்கும் மேற் பட்ட பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஏராள மான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டுள்ளன. வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை களையும், சிதைவுகளையும் அகற்ற ஓராண்டு ஆகும் என்று உத்தரகாண்ட முதல்வர் கூறு வது அழிவின் பரப்பை விளக் குவதாகும்,இந்த சீரழிவுக்கு இயற்கை மட்டும் காரணம் அல்ல. மலை யோரச்சாலைகளின் திடம் குறித்து அவ்வப்போது எழும் குரல்களை அரசுகள் கண்டு கொள்ளவில்லை. உத்தர காண்டை மாறி மாறி ஆண்டு வந்த காங்கிரஸ், பாஜக அரசு கள் வளர்ச்சிக்கு முக்கியத் துவம் கொடுப்பதாக கூறி இன்று வாழ்விடத்தையே அழித்து விட்டன. மேம்பாட்டு திட்டம், மின் உற்பத்தி ஆலைகள் நிறு வல், அணைகள் கட்டுதல் என்று கூறி இமய மலையின் இயற்கை வளத்தை கொள் ளையடித்து விட்டார்கள். இத னால் பூமியின் உறுதி அசைக் கப்பட்டு விட்டது என்பதை மறந்து விடக்கூடாது.கடந்த சில நாட்களாக இந் திய வானிலை ஆய்வு மையம் விடுத்து வந்த அபாய எச் சரிக்கை போதுமான கண்டிப்பு டன் கூறப்படவில்லை. விடுக் கப்பட்ட எச்சரிக்கைகளுக் குரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ப தும் உண்மை. அலக்நந்தா நதி உற்பத்தியாகும் கோமுக் தொட ங்கி உத்தர்காசி வரையிலான 130 கி.மீ. தொலைவை சுற்றுச் சூழல் உணர்வு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற அறிவிக்கை இன்று வரை நடை முறைக்கு வரவில்லை. மாநி லத்தின் வளர்ச்சிக்கு இந்த அறிவிப்பு இடையூறாக இருக் கும் என்று கூறி உத்தரகாண்ட் அரசு இந்த அறிவிப்பை வெளி யிட மறுத்து வந்துள்ளது.
இயற்கை சுற்றுச்சூழலில் பாதிப்பு, பாகீரதி நதி, அலக் நந்தா நதிகளின் ஊடே நீர்மின் நிலையங்கள் அமைப்பதால் மலைச்சரிவுகளின் திடத் தன்மை சீர்குலைக்கப்படுதல், மண்வளம் அரிக்கப்படுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைத் திட தேவையான எண்ணிக் கையில் மரங்கள் நடுவதில் மாநில அரசு தவறி விட்டது என்று இந்திய தலைமை தணிக்கையாளர் மற்றும் கணக்காயர் 2010ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்ட வைகளை மறந்து விட முடி யாது. தற்போதைய சீரழிவை அரசியலாக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். அத் துடன் இப்பிராந்தியத்தின் பல வீனமான சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களில் அதிகாரிகள் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள் ளார். உத்தரகாண்ட் மாநிலம் அமைந்த நாள் முதல் இந்த மாநிலத்தை காங்கிரசும், பாஜக வும் மாறிமாறி ஆண்டு வந் துள்ளன.
எனவே இந்த சீர ழிவுக்கு இருகட்சி அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். உத் தரகாண்ட பேரழிவை மனதில் கொண்டு மத்திய -மாநில அர சுகள் சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய விஷயங்களில் தீர்க்க மான முடிவுகளை எடுக்க வேண்டும். மனிதன் வாழ்வ தற்கு திட்டங்கள் தேவைதான். திட்டங்களுக்காக மனிதர் களை பலி கொடுக்க முடியாது

No comments:

Post a Comment