Monday, 24 June 2013

மதிமுக வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்டனர்.

தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தாய்மூர் பகுதியில் பத்து நாட்களுக்கு மேல் தண்ணீர் வராததை கண்டித்தும் அசுத்தமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் வருவதாகவும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் மதிமுக வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்டனர். சாக்கடை நீர் போன்று வரும் குடிநீருடன் வந்த மதிமுக வினர் வளர்ச்சி அலுவரிடம் கோரிக்கையை முன் வைத்தனர்,  வளர்ச்சி அலுவலர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சரியான நடவடிக்கை இல்லையெனில் வரும் 7 தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட போவதாக மதிமுக ஒன்றியச் செயலாளர் உத்திராபதி தெரிவித்தார். இதில் நகர செயலாளர் ஜெயபால், ஊராட்சி கழக செயலாளர் அரசு, திமுக கிளைச் செயலாளர் வீரசேகர், பக்கிரிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment