Friday, 21 June 2013

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் சாலை மறியல்





நாகப்பட்டினம், ஜூன் 20-விவசாய விளை நிலங் களையெல்லாம் ரியல் எஸ் டேட் ஆக்கி, வீட்டு மனை களாக விற்பனை செய்கின்ற நாசகரப் போக்கை எதிர்த்து, நாகை மாவட்டம், தலை ஞாயிறு ஒன்றியம், கொத் தங்குடி பேருந்துநிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தலைஞா யிறு ஒன்றியம் சார்பில், வியாழக்கிழமைகாலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மாபெரும் சாலை மறி யல் போராட்டம் நடை பெற்றது.சி.பி.எம்.தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் அ. வேணு சாலை மறியலுக்குத் தலைமை தாங்கினார்.
கட்சி யின் மாவட்டக் குழு உறுப் பினர் வி.அம்பிகாபதி, விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.முருகே சன், விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியத் தலைவர் பி.எஸ்.டி.அசோகன், வி.தொ.ச. ஒன்றியச் செய லாளர் டி.செல்லையன், விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வி.ராஜகுரு, வாலி பர் சங்க ஒன்றியச் செயலா ளர் ஏ.ராஜா உள்ளிட்டோர் கோரிக்கை உரையாற்றினர்.கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாள ருமான வி.அமிர்தலிங்கம் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினார். இந்தச் சாலை மறியல் போராட்டத்தினால், பட்டுக்கோட்டை, திருத் துறைப்பூண்டி, நாகை, வேளாங்கண்ணி, தலை ஞாயிறு, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்குச் செல் லும் போக்குவரத்து 3 மணி நேரமாக ஸ்தம்பித்தது. அதன் பின்னர், நாகை வருவாய்க் கோட்டாட்சியர் வே.மணிகண்டன், நிகழ் விடத்திற்கு வருகை தந்து, கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னார்.
அடுத்த 10 நாட்களுக் குள், இந்தக் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாக விற்ப னைக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்படும், இவ்வாறு விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக ஆவ தற்கு அனுமதியளித்த வட் டாட்சியர் மற்றும் சம்பந் தப் பட்ட அலுவலர்கள் மீது துறை வாரியான நட வடிக்கை எடுக்கப்படும், மற்றும் இதுவரை, ரியல் எஸ்டேட்டுகளாக மாறி யுள்ள நிலங்களில் அரசுக்கு உரிமையான நிலங்களோ, புறம்போக்கு நிலங்களோ பறிபோயிருந்தால், அவை சட்டப்படி மீட்கப்படும் என்று வருவாய்க் கோட் டாட்சியர் வே.மணிகண் டன் உறுதியளித்ததன் பேரில், சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment