Sunday, 31 March 2013

மிரட்டல் காரணமாக ஈபில் டவரின் பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

மிரட்டல் காரணமாக ஈபில் டவரின் பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று எனப் புகழ் பெற்றது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் ஆகும். 1889ஆம் ஆண்டு கட்டப்பட இந்த டவர், உலகின் உயரமான கட்டமைப்பு என்ற பெருமையுடன், பிரான்சின் புராதான கலைச்சின்னனமாகவும் விளங்குகின்றது. நாள்தோறும், இதனைச் சுற்றிப்பார்க்க வருபவர்களில் வெளிநாட்டுப் பயணிகளும் அடங்குவர்.

2011-ஆம் ஆண்டில், இதனைத் தகர்க்கப்போவதாகப் பலமுறை வந்துள்ள மிரட்டல் எச்சரிக்கைகளால், இங்கு வந்த பார்வையாளர்கள் 4,000 பேருக்கும் மேல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், நேற்று சனிக்கிழமை, அந்நாட்டு நேரப்படி 7 மணி அளவில், ஒரு அனாமதேய மிரட்டல் எச்சரிக்கை தொலைபேசி மூலம் வந்துள்ளது.

இதனால், அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் 1400 பேரும் அப்புறப்படுத்தப்பட்டு, மோப்பநாய்கள் உதவியுடன் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தமுறை வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்புப்பணியில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது.

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மாலி நாட்டில், புரட்சியாளர்களை ஒடுக்க, அரசுக்கு ஆதரவாக பிரான்ஸ் தனது ராணுவத்தினரை அனுப்பியுள்ளது. இதனால் எழும் தொடர் அச்சுறுத்தல்களால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Saturday, 30 March 2013

வேளாங்கண்ணி



வேளாங்கண்ணியில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனைநாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.



நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சியாக திருச்சிலுவை ஆராதனை உள்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளி நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படும்.
அந்த வகையில், புனித வெள்ளி நாளான வெள்ளிக்கிழமை மாலை வேளாங்கண்ணி பேராலயத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முதல் நிகழ்ச்சியாக, இறைவார்த்தை வழிபாடு- பொது மன்றாட்டு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில், சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப் பாதை நிறைவேற்றுதல், சிறப்பு மறையுரை ஆகியன நடைபெற்றது.
பின்னர், திருச்சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரானின் திருவுடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, திருத்தலக் கலையரங்கத்திலிருந்து, பேராலய கீழ்க்கோவிலுக்கு பவனியாக கொண்டுச் செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பேராலய அதிபர் ஏ. மைக்கில் தலைமை வகித்து, சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றினார். பேராலய துணை அதிபர் ஆரோக்கியதாஸ் மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்கள் முன்னின்று வழிபாடுகளை நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், புதுவை, கேரளம், ஆந்திரம் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

தனி ஈழம் கோரிக்கையை இந்தியாவால் செயல்படுத்த முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்



ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளிக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். உடன் (இடமிருந்து) மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்.முத்துகுமார் (வடக்கு), ஈ.பி.ரவி (மாநகர்), ஆர்.எம்.பழனிசாமி.

தனி ஈழம் கோரிக்கையை இந்தியாவால் செயல்படுத்த முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் தமிழக மாணவர்கள், தங்களது எதிர்கால நலன் கருதி போராட்டத்தைக் கைவிட்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமோ, அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி உதவியுள்ளது. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருப்பதாக சிலர் பிரசாரம் செய்கின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து ஒரு சில ஊடகங்களுக்கு பண உதவி கிடைப்பதால், அவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்னையை பூதாகரமாக வெளியிடுகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 2 தீர்மானங்களில் இருக்கும் உணர்வுகளையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. அதேநேரத்தில் தனி ஈழம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது இந்தியாவால் செய்ய இயலாது. பிற நாடுகளுடன் சேர்ந்து, சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இந்தியாவே நேரடியாகக் களம் இறங்க முடியாது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதை இந்தியாவால் உடனடியாகச் செய்ய முடியாது. இந்தியாவின் இறக்குமதி - ஏற்றுமதி பெரும்பாலும் இலங்கை வழியாகவே நடைபெறுகிறது. எனவே, பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்த பிறகே இந்தியா தீர்க்கமான முடிவுக்கு வர முடியும்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் விளையாடக் கூடாது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக உள்நோக்கத்துடன் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் கருத்துத் தெரிவித்திருந்தால், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற மத்திய அரசு தயங்கக் கூடாது என்றார்.

புதிய ரயில் பாதை பணிகள்: டி.ஆர். பாலு ஆய்வு


டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் பாதைத் திட்டப் பணிகள் குறித்து ரயில்வே நிலைக் குழுத் தலைவரும், திமுக மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - திருக்குவளை - நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி, மன்னார்குடி  பட்டுக்கோட்டை, தஞ்சை - ஒரத்தநாடு பட்டுக்கோட்டை ஆகிய புதிய ரயில் பாதைகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது, அவரிடம் தங்கள் கிராமத்தின் நடுவே அமைக்கப்படவிருக்கும் ரயில் வழித்தடப் பணிகளால் நூற்றுக்கணக்கான தனியார் கட்டடங்களும், பொதுச் சொதுக்களும் சேதம் அடையும் என்பதால், மாற்று வழியில் இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தென்னமநாடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாலு, அங்கிருந்த ரயில்வே அலுவலர்களை உடனடியாக தென்னமநாடு பகுதிக்குச் சென்று, ரயில் திட்டத்தின் உத்தேச வரைவை மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா என்பதை அந்த கிராம மக்களிடம் கலந்துபேசி,  முடிவு எடுக்கக் கேட்டுக் கொண்டார்.
இதன்படி, அலுவலர்களும் - கிராம மக்களும் கலந்து பேசி சரியான வழித் தடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
இதேபோல பட்டுக்கோட்டை அருகில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் அகற்றப்படாமலிருக்க ரயில்வே துறையின் திட்ட வரைபடத்தை உருவாக்க வேண்டும் என போதகர் ஜேக்கப் செல்வராஜ் அடிகளார் தலைமையில் கிறிஸ்துவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து, உரிய முடிவு மேற்கொள்வதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

நாகப்பட்டினம், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாகையில் விசுவ இந்து பரிசத் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்


நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில்விசுவ இந்து பரிசத் அமைப்பினர் சார்பில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விசுவ இந்து பரிசத் அமைப்பு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார்.
 
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாகையில் விசுவ இந்து பரிசத் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்போராட்டத்தில் தமிழர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை கண்டித்தும், மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு உடனடி தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 
போராட்டத்தில் சிவசேனா இந்து அதிரடிப்படை மாநில தலைவர் தங்க.முத்து கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்தில் சிங்களர்கள் தாக்குதல்


இலங்கையின் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று பொது சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இலங்கை தேசியக் கொடிகளுடன், வந்த முகமூடி ஆசாமிகள் திடீரென அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பொருட்களையும் அடித்து நொறுக்கினர். மேலும் தமிழர்களைப்பற்றி கடுமையான வார்த்தைகளால் திட்டினர். 
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்தில் சிங்களர்கள் தாக்குதல்

இந்த தாக்குதலில், இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அவர்களை சிங்கள போலீசார் விடுவித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது, சிங்கள புலனாய்வுத்துறை இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களிடம் செல்வாக்கு கொண்ட கட்சியாகும். இந்த கட்சிக்கு 13 எம்.பி.க்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம் தலைமையில் மத்திய திட்டப்பணிகள் ஆய்வு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு



 
ப.சிதம்பரம் தலைமையில் மத்திய திட்டப்பணிகள் ஆய்வு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
சிவகங்கையில், மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று ஆய்வு செய்தார். இந்திரா காந்தி வீட்டு வசதி திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, கண்காணிப்பு குழுவினரிடம் கேட்டறிந்தார்.
 
பொதுவாக  இந்த கூட்டத்தில் 12 பஞ்சாயத்து தலைவர்கள், 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பங்கேற்பார்கள். ஆனால் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 12 பஞ்சாயத்து தலைவர்கள், 4 எம்.எல்.ஏ.க்கள், காரைக்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
 
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின்மூலம், அளவிதாங்கன், கீழையூர் காலனி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
 
புரோக்கர்கள் மற்றும் இடைத்தரகர்களை தவிர்க்கவே “உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதிலும் குறுக்கீடுகள் இருக்கின்றன.
 
எனவே, அரசின் சலுகைகளை முழுமையாக பெறுவதை உறுதி செய்யும் வகையில், முதியோர் பென்ஷன், கிராமப்புற வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை அனுப்ப அரசு முடிவு செய்தது. கல்விக் கடன் திட்டத்தினால் நாடு முழுவதிலும் உள்ள ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள், என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அகங்காரப் போக்கினால் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிக்கப்படலாம்

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கரு ணாநிதி மெளனம் சாதித்து, இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தொட ர்ந்தும் திரைமறைவில் ஆதரவு தெரிவிக்கும் கொள்கையை மிக வும் சாதூரியமான முறையில் இப்போது நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறார்.
அதேவேளையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியின் அதிகார மோகத்தில் ஆழ்ந்திருக்கும் ஜெயலலிதா அம்மையார் செய்வதறி யாது எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைத்து இன்று இந்திய அரசியலில் ஒரு சர்ச்சைக்குரிய பெண்ணாக விளங்குகிறார்.
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக விளையாட் டுத்துறையை குறிப்பாக, இந்திய மக்களில் சுமார் 90சதவீதமானோ ரின் அபிமானத்தைப் பெற்ற கிரிக்கட் விளையாட்டை அரசியல் மயப்படுத்தி இந்தப் பெண்மணி அனைத்துலக கிரிக்கட் ரசிகர்க ளின் கிண்டலுக்கு இலக்காகியிருக்கிறார்.
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கட் போட்டிகளில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் விளையாடுவதை தமிழ்நாடு அரசாங்கம் அனும திக்காது என்று ஜெயலலிதா அறிவித்திருப்பது குறித்து இலங்கை வீரரும் சுழல் பந்துவீச்சில் உலக சம்பியனுமான முத்தையா முரளி தரன் தெரிவித்திருக்கும் கருத்து ஜெயலலிதா அம்மையாரை ஒரு அவமான சின்னமாக மாற்றியிருக்கிறது.
நான் இலங்கை அணியில் 20 ஆண்டுகாலம் விளையாடிய ஒரு தமி ழனாகும். வெளிநாடுகளில் எனக்கு எத்தனையோ சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் தோன்றிய போது இலங்கை கிரிக்கட் அணியைச் சேர்ந்த எனது சகாக்கள் எனக்காக போராடி என்னை பிரச்சினைக ளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமும் எனக்கு சகல உதவிகளையும் செய்ய தயக்கம் காட்டவில்லை என்று முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.
முன்னர் இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடை யில் மோதல்கள் ஏற்பட்ட போதிலும் இன்று எனது நாட்டில் மக் கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந் திய தரப்பினர் இலங்கைக்கு கட்டாயம் வந்து முன்னர் நடந்தவ ற்றை மறந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதை நேரடியாக பார்க்க வேண்டும். அன்றைய நிலை போல் மீண்டுமொரு யுத்த த்தை இலங்கை மக்கள் விரும்பவில்லை. நாம் கிரிக்கட் வீரர்கள். எமது கிரிக்கட் விளையாட்டின் மூலம் நாம் மக்களை மகிழ்விக்கி றோம். அரசியலுக்கு இறங்க நாம் விரும்பவில்லை என்றும் முரளி தரன் யதார்த்தபூர்வமாக ஜெயலலிதா அம்மையாருக்கு ஒரு தக்க பதிலை அளித்திருப்பது பாராட்டக்கூடிய விடயமாகும்.
இப்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய வரம்பை மீறி இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அநாவசியமான அழுத்த ங்களை கொண்டுவருவதற்கு எத்தனித்து வருகிறார். இலங்கை இந் தியாவின் நட்பு நாடு என்று நாம் கூறுவதை நிறுத்த வேண்டும். மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக்குற்றவாளிகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும். அடக்கு முறையை நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதார தடைவி திக்க வேண்டும்.
இந்த யோசனைகளை இந்திய மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்மொழிந்து அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜெயலலிதா அம்மையார் சர் வாதிகார போக்கில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவு பிற ப்பிக்கும் தொனியில் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்களை இந்திய மத்திய அரசாங்கம் துச்சமாக மதித்து அதனை பொருட்படுத்தப் போவதில்லை என்று புதுடில்லியில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பற்றி கருத்து தெரிவிக்கும் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணிய சுவாமி, அதிகார மமதையில் செய்வதறியாது கொக்க ரித்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் கொட்டத்தை மத்திய அரசாங்கம் அடக்குவது அவசியமாகும். இல்லையானால் ஜெயல லிதா பொறுப்பற்ற விதத்தில் வெளியிடும் கருத்துக்கள் இந்தியாவு க்கு சர்வதேச அரங்கில் அவமானத்தை ஏற்படுத்திவிடும் என்று அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா இவ்விதம் தொடர்ந்தும் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அநாவசியமான அழுத்தங்களை கொண்டு வந்து தனது அர சியல் ஆதிக்கத்தை பெருக்கிக் கொள்ள முயற்சித்தால் நிச்சயம் ஜெயலலிதா பாதகமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியி ருக்கும் என்று எச்சரித்திருக்கும் சுப்ரமணிய சுவாமி அவர்கள், ஜெயலலிதாவின் தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்தை மத்திய அர சாங்கம் கலைத்துவிட்டு அங்கு ஆளுநர் ஆட்சியை பிரகடனம் செய்தால் ஜெயலலிதாவுக்கு அடங்கிப் போவதை விட வேறெ ன்ன செய்ய முடியுமென்று அவர் கேட்டுள்ளார்.
ஜெனீவா பிரேரணை மீது தமிழ்நாட்டில் மாணவர்களை பகடைக்காய் களாக வைத்து ஆரம்பித்த இலங்கை எதிர்ப்பு போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கை ஓங்கி, கருணாநிதியின் அர சியல் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பார்த்து அச்சம் கொண்ட ஜெயலலிதா, திடீரென்று தனது போக்கை மாற்றியிருக்கி றார். இலங்கைத் தமிழர்களின் மீது அன்பும், பாசமும் கொண் டவரைப் போல் சினிமாவில் நடிப்பதை விட சிறப்பாக நடித்து விளையாட்டுத்துறையை அரசியல் மயமாக்கியுள்ளதோடு, புதுப் புது கோரிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு முன்வை த்து தனது மக்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்வதற்கு எடுக் கும் தந்திரோபாயமே இதுவென்று தமிழ்நாட்டின் அரசியல் அவ தானிகள் ஜெயலலிதாவைப் பார்த்து இன்று கிண்டல் செய்கிறார் கள்.

தமிழர்கள் விரட்டியடிப்பு- Tamil People

இங்கே பொங்க முடியாது ஓடோடிப் போய் விடுங்கள்; நாயாறு சென்ற தமிழர்கள் விரட்டியடிப்பு.
news
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலில் தமது நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற தமிழ் மக்களை  "இங்கே வர வேண்டாம் ஓடிப் போங்கள்'' என்றவாறு இராணுவத்தினர் விரட்டியடித்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
 
நாயாறுப் பாலத்துக்கும் கொக்குத்தொடு வாய்க்கும் இடையிலுள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலுக்கு பங்குனி உற்சவத்தை முன்னிட்டு 15 தொடக்கம் 20 வரையிலான குடும்பங்கள் நேற்று நண்பகல் சென்றன கோயில் பொங்கலுக்குரிய ஆயத்தங்களை அந்தக் குடும்பத்தினர் மேற்கொண்டிருந்தனர். 
 
தமது நேர்த்தியைச் செலுத்துவதற்காகவே அவர்கள் அங்கு சென்றிருந் தனர். திடீரென  அங்கு இராணுவத்தினர் நால்வர் வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒருவர், "இங்கு யாரும் பொங்கக்கூடாது பொங்குவதாக இருந்தால் நாயாறுப் பாலத்துக்கு அப்பால் கொண்டு சென்று பொங்குங்கள்'' என்று கூறியவாறு அங்கிருந்து விரட்டினார் '' என்று மக்கள் உதயனிடம் தெரிவித்தனர்.
  
அதை அடுத்து வேதனையுடன் திரும்பிச் சென்ற அவர்கள் சேருவில பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமு சிவலோகேஸ்வரனிடம் முறையிட்டனர். ஆலயம் அமைந்துள்ள பகுதியைச் சூழவும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துவதாக சிவலோகேஸ்வரன் தெரிவித்தார். 

ராமேஸ்வரத்தில் 5000 மீனவர்கள் ரெயில் மறியல்

ராமேஸ்வரத்தில் 5000 மீனவர்கள் ரெயில் மறியல்



கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்பிடி தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக இன்று ரெயில் மறியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தனர். இதையடுத்து மீனவ சங்கங்களுடன் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும் புதன் கிழமைக்குள் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். அதனை மீனவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. 

இதையடுத்து திட்டமிட்டபடி மீனவர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து தங்கச்சிமடம் வரை மீனவர்களும், பெண்களும் என சுமார் 5000 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது

ஆழியார் அணை - Aaliyaru so trier




ஆழியார் அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைகோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. அம்பரம்காளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் உள்ளது.
இது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிக நீளமான அணையாகும் - சுமார் 2 கி.மீ. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த சூழல் மிகவும் மனதைக் கவர்வதாக உள்ளது. படகு சவாரியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்த அணையின் அருகாமையில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி சுற்றுலா மையத்தின் கவர்ச்சியைக் கூட்டுகிறது.இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.

Tamilnadu colleges open date ?




அரசு கல்லூரிகள் ஏப்ரல் 1-ந்தேதி திறக்க வாய்ப்பு இல்லாததால் செமஸ்டர் தேர்வுகள் மேலும் தள்ளிப்போகிறது.
இலங்கை பிரச்சினையை முன்னிறுத்தி கல்லூரி மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசு கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து கல்லூரிகளும் 18-ந்தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 21-ந்தேதி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரித்ததால் வெற்றி பெற்றது.
இதனால் மாணவர்கள் போராட்டம் தணியும், அதனைத் தொடர்ந்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. அதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் 1-ந்தேதி கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களை போராட்டத்தை கைவிட்டு கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கலை மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள். 1-ந்தேதி முதல் தனியார் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே தனியார் நிகர்நிலை பல்கலக்கழகங்கள் திறக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான தனியார் கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் திங்கட்கிழமை திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் அரசு கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த வாரத்திற்குள் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

World Sparrow Day-India ஏய்குருவி! சிட்டுக்குருவி!




ஏய்குருவி! சிட்டுக்குருவி!
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20 ஆம் நாள்உலக சிட்டுக்குருவி தினமாக அனுசரிக்கப்படுகின்றது. மனிதனுடன் நீண்ட காலமாக தொடர்புடையஒரு பறவையாக உள்ள சிட்டுக்குருவியானது உலகில் பலப்பகுதிகளில் காணப்பட்டாலும் இந்தியாஉள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் அழிவினை எதிர்நோக்குவதிலிருந்து மீட்டு பாதுகாக்கும்பொருட்டும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தும் பொருட்டும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

அண்மைக் காலமாகப் பரபரப்பாகவும் வேதனையாகவும்பேசப்பட்டுவரும் பொருளாக உள்ளது சிட்டுக்குருவி. அலைபேசி (செல்போன்) கோபுரத்தின் கதிர்வீச்சினால்சிட்டுக்குருவியினம் அழிந்துவருவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. நீரிலிருந்துநிலத்தில் முதலில் காலூன்றிய ஊர்வனவற்றிலிருந்து ஒரு பக்கம் பறவைகளும் மற்றொரு பக்கம்பாலூட்டிகளுமாய்ப் பரிணாமம் அடைந்து தோன்றிய உயிரினங்களுள் சிட்டுக்குருவி பறவையினத்தில்பேசெரிடே என்னும் குடும்பத்தினைச் சார்ந்தவையாகும். இக்குடும்பத்தைச் சார்ந்த குருவிகளேஉண்மையான சிட்டுக்கள் என வழங்கப்படுகின்றன. இவை சிறிய உடலுடன் பழுப்பு நிறத்தில் குட்டையானவாலுடன் சக்திவாய்ந்த அலகுகளுடன் கூடிய உடலமைப்புடன் காணப்படும். உலகம் முழுவதிலும்பேசர் பேரினத்தின் கீழ் சுமார் 30 சிற்றினங்கள் காணப்படுகின்றன. இவை மனித இனத்துடன்நெருக்கமான உறவைக்கொண்டு மனித வாழிடங்களில் எவ்வித நெருடலும் இல்லாமல் வாழும் தகவமைப்பினைப்பெற்றுள்ளன. இத்தகவமைப்பே குறிப்பாக பேசர் டொமஸ்டிகஸ் (Passer domesticus) எனப்படும் சிட்டுக்குருவிகள் நமது வீடுகளில்நம்முடன் சகசமாய் வாழக்காரணமாக விளங்குகிறது.
உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும்இச் சிட்டுக்குருவி இனம் இந்தியாவிலும் மிகுதியாகக் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது இவ்வினம்பெருமளவில் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றன. இவ்வினம் அழிந்ததற்கான தெளிவான காரணங்கள்தெரியாத போதிலும் செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு முக்கியக் காரணமாகநம்பப்படுகின்றது. சிட்டுக்குருவியின் வாழிடம் பெருமளவில் அழிக்கப்பட்டதாலும், பயிர்பெருக்கத்திற்காகஅதிக அளவில் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லியினாலும் பாதிக்கப்பட்டு பெருமளவில்இன்று சிட்டுக்கள் காணமல் போயின.

எனவே இந்தியாவில் சிட்டுக்குருவியின்நடமாட்டத்தினைக் காட்சிப்படுத்தும் பொருட்டு ”சிட்டிசன் ஸ்பாரோ” (Citizen Sparrow)எனும் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டு இணையம் வழியே தகவல் திரட்டப்பட்டு வருகின்றது.இக்கணம் வரை சுமார் 6000 பேர் 8500 இடங்களில் சிட்டுக்குருவிகள் உள்ளதைப்பதிவு செய்துள்ளனர்.உண்மையிலேயே இத்தகவல் இயற்கை ஆர்வலருக்கு மகிழ்ச்சியான ஒன்றாகும். இந்தியா முழுவதிலும்சிட்டுக்குருவிகள் காணப்படுவது பதிவாகிய போதிலும், இந்தியாவின் மையப்பகுதிகளில் மிகக்குறைந்தஅளவே பதிவாகி உள்ளன. தமிழகம் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக அளவில் இக்குருவிகள்காணப்படுகின்றன.

’சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதிதெரியுமா? என்னை விட்டுப் பிரிந்தக் கணவன் இன்னும் வீடு திரும்பல! எனத் தலைவி தன் துயரத்தினைச்சிட்டுக்குருவியிடம் பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர் போல சிட்டுக்குருவிநம்முடன் வாழ்வது இந்தச் சினிமா பாடல் மூலம் நாம் அறியலாம். மேலும் ஏ குருவி, குருவிகுருவி, சிட்டுக் குருவி, உன் சோடி எங்க? அதகூட்டுக்கிட்டு எங்கவிட்டத்தல வந்துகூடுகட்டு எனச் சிட்டுக்குருவியினைத் தலைவன் அழைப்பதிலிருந்தும் சிட்டுக்குருவி மனிதனுடன்நெருங்கி வாழ்ந்ததை நாம் உணரலாம்.

மனிதனுடன்ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக்குருவியினைப்பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும்அபரிதமாகக் காணப்படுகின்றன. கிராமங்களில்உள்ள வீடுகளில் தாழ்வாரங்கள், இறவாணங்களில் உள்ள சிட்டுக்குருவியின் கூட்டினைப் பற்றியவர்ணனைகளும் சங்க காலத்தில் பதிவாகியுள்ளன. சங்ககால மக்கள் இயற்கையைவிரும்பி வாழ்ந்ததோடு தம்முடைய இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவுச் செய்ததோடு இயற்கையைப்போற்றவும் செய்தனர். ஆனால் தற்காலத்தில் வெளிவரும் பாடல்களில் கூட இயற்கையைப் பற்றியவர்ணனைகள் குறைந்துவிட்டதாகச் சங்ககாலப் பாடல்களில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள்வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எனவே மனிதனுடன் பன்னெடுங்கால தொடர்புடையஅமைதியான அன்பின் தன்மையினைப் போதிக்கும் இக்குருவியினத்தைக் காப்பது நமது கடமையன்றோ!






Dr.P.MARIAPPAN

Asst Professor

Department of Zoology
Rajah Serfoji Govt College
Thanjavur 613 005
TAMIL NADU
INDIA





நம் நாடு



நாடுவிட்டு நாடுவந்த பின்பும் கூட


    நம்மொழியின் மேல்பற்றே உள்ள தையா!

கூடுவிட்டுக் கூடுபாயும் மாயம் போலக்

    குடிகொண்ட நாட்டுமொழி வந்த தையா!

வீடுவிட்டு வெளிசென்றால் விருப்ப மின்றி

    வேற்றுமொழி பேசியாக வேண்டு மையா!

கோடுபோட்டு வாழ்ந்தாலும் கொள்கை தன்னைக்

    கூறுபோட்டு விற்கவேண்டி உள்ள தையா!


மேசைநிறைய புத்தகங்கள் இருந்த போதும்

    மெய்யறிவு படித்திடாமல் வந்தி டாது!

வீசைஎன்ன விலையென்று கேட்டுக் காசை

    வீசுவதால் உண்மையன்பு கிடைத்தி டாது!

ஓசையுடன் பாட்டெழுதிப் படைத்திட் டாலும்

    உள்ளிருக்கும் வாசகங்கள் புரிந்தி டாது!

காசைத்தே டும்உலகில் வாழ்ந்த போதும்

    கவிதைமொழி தமிழருக்குக் கசந்தி டாது!


தென்னவரின் தேமதுரத் தமிழின் ஓசை

    தேடியதைக் காதினிக்கக் கேட்டுக் கொண்டே

அன்னமிடும் அம்மாகைப் பக்கு வத்தை

    ஆசையுடன் அள்ளியள்ளி உண்ட போதே

விண்ணமுதம் என்பதெல்லாம் விண்ணில் இல்லை!

    வீட்டினிலே விருந்தோம்பும் பெண்ணி ருந்தால்

மண்ணுலகில் விண்ணுலகம் வந்து சேர்ந்து

    எண்ணமெல்லாம் தமிழோசை கேட்டே ஆடும்!


நம்மொழியின் மேல்பற்று நன்றே கொண்டு

    நாட்டமுடன் வந்துநாமும் பேசு கின்றோம்!

எம்மொழிக்கே இணையாக மொழியும் உண்டோ?

    இருந்திருந்தால் மனமங்குச் சென்று தங்கும்!

செம்மொழியாய்த் தேமதுரத் தமிழின் ஓசை

    செழிப்பாகக் கேட்டிடவே காத்து நிற்போம்!

எம்முறையும் எம்தமிழின் இனிமை கேட்டால்

    இன்பமிதே! வேறில்லை என்றே சொல்வோம்!


அருணா செல்வம்.

Thursday, 28 March 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு


 


ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடிகள் குறித்த முன்னோட்டம் வந்ததும், அதைக்கூட படிக்காமல் ஆசிரியர்களெல்லாம் தகுதியின் அடிப்படை யில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சும்மா அதில் போய் பிரச்சினை பண்ணக்கூடாது என்றெல்லாம் கருத்துக்கூறி வருகின்றனராம் முகநூலில்!
அவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன என்றும் தெரியாது. ஏன் என்றும் தெரியாது. இதில் தகுதிக் குறைவு என்பதற்கு பேச்சே கிடையாது என்பதும் புரியாது. ஆயிரம் முறை சொன்னாலும் அதுகள் பேசுவதைப் பேசிக் கொண்டுதானிருக்கும். அவர்களுக்கும் இறுதியில் நாம் விளக்கம் சொல்வோம்.
முதலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்திருக்கும் மோசடிகள் பற்றித் தெரிந்து கொள்ள அடிப்படையாகச் சில விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. இடைநிலை ஆசிரியர்கள் (Secondary grade)
2. பட்டதாரி ஆசிரியர்கள் (Graduate assistants / BT assistants)
3. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (Post Graduate assistants)
  • இதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு அவசியமில்லை. நேரடிப் போட்டித் தேர்வோ அல்லது பதிவு மூப்பு அடிப்படையிலோ பணி நியமனம் செய்து கொள்ளலாம் (முன்பிருந்த முறைப்படியே).
இது குறித்து மத்திய அரசு புதிய விதிமுறைகள் எதுவும் வகுக்கவில்லை.
ஃ    மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப் பட்டு, அவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர்களாகப் பணிபுரியத் தகுதியானவர்கள். ஆசிரியர் படிப்பு முடித்த பின்னர் தனியாக இப்படியொரு தேர்வு எதற்கு என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங் களிலும் எதிர்ப்புக் கிளம்பினாலும் இப்போது நாம் பேசப் போகும் செய்தி, அப்படி நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகள் - அவற்றின் முடிவுகள் - பணி நியமனங்கள் ஆகியவை சட்டப்படி நடந்திருக்கின்றனவா என்பது பற்றித்தான்.
  • கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதுநிலைப் பட்ட தாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான முறைகேடு அரங்கேறியிருக்கிறது. நாமும் ஒவ்வொன் றாகப் பார்ப்போம்.
முதலில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த விவரங்கள். பணி நியமனங்கள் என்று வரும்போது எவ்வளவு காலிப் பணியிடங்கள்? அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு? என்பதைக் குறிப்பிட்டு அறிவிக்கை (Notification) வெளியாகும். நாமும் இந்த அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றுள்ளதா என்பதைப் பார்த்தாலே போதுமானது.
ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று மொத்தமாக 21,000 பேருக்கு வேலை. அதில் 10,000க்கும் மேற்பட்ட  இடைநிலை ஆசிரியர்கள் 8000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 3000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என்று செய்தி வெளிவந்த போது, நாமும் நிரப்பப்பட்ட பணியிடங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டி ருக்கிறதா என்ற பார்வையுடன் தான் இப்பிரச்சினையை அணுகத் தொடங்கினோம்.
அப்போதுதான் எவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரம் கொண்ட அறிவிக்கை கூட வெளியிடப்படாதது தெரிய வந்தது. இந்தப் பிரச்சினையின் வேர் இன்னும் ஆழத்தில் இருப்பதும் புரியவந்தது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும். அதென்ன தகுதித் தேர்வு? போட்டித் தேர்வு? தனித்தனியாகவா இருக் கிறது? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழுந்துவிட்டால் நீங்கள் விழித்துக் கொண்டீர்கள் என்று பொருள். ஏனென்றால் இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல் குழம்ப வைத்ததுதான் இந்தப் பணி நியமன மோசடியில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றி!
UPSC, TNPSC, TRB என்றெல்லாம் நடத்தப்படுகின்ற னவே அவைதான் போட்டித் தேர்வுகள். அதாவது மொத்த காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்பதை அறிவித்து அதற்காகவென்றே நடத்தப்படுவதுதான் போட்டித் தேர்வு.
NET, SLET, SET, TET போன்றவையெல்லாம் தகுதித் தேர்வுகள் (Eligibility Test). இவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இது வேலை பெறுவதற்கான தகுதித் தேர்வே தவிர, இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை என்பது கிடையாது.
போட்டித் தேர்வு
1. வேலை வாய்ப்பிற்கான அறிவிக்கைகளின் கீழ் நடத்தப்படும் தேர்வு.
2. ஒவ்வொரு ஆண்டும் நடத்த அவசியம் இல்லை (எ.கா. TNPSC)
3. பெற்றுள்ள மதிப்பெண்களைப் பொறுத்து ஒவ்வோ ராண்டும் வகுப்பு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் மாறும்.
4. இதில் வெற்றி பெறுவோருக்கு தேர்ச்சிச் சான்றிதழ் தரப்படாது. மதிப்பெண்களை வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய முடியாது.
5. கட்-ஆப்க்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி.
6. இதிலிருந்து நேரடியாக பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியலைத் தயாரிக்க முடியும்.
தகுதித் தேர்வு
1. வேலை வாய்ப்புக்கான அறிவிக்கைக்கும் தகுதித் தேர்வுக்கும் தொடர்பில்லை
2. ஒவ்வோராண்டும் நடத்தப்படும் (TET ஒன்றுக்கு மேலும் நடத்தப்படலாம்).
3. மொத்த இடங்கள் எவ்வளவு என்ற பிரச்சினை இல்லை. எனவே வகுப்பு வாரியான தனித்தனி தகுதி அளவுகோல்கள் முன்பே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகோல்கள் மாறாது.
4. வகுப்பு வாரியாக அறிவிக்கப்பட்ட தனித்தனி தகுதி அளவுகோலுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும். அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
5. தகுதித் தேர்வில் பெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை என்பது உறுதி கிடையாது. இதில் வெற்றி பெற்றோரை தனியே விண்ணப்பிக்கச் சொல்லி, அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முறை என்னவோ அதற்கேற்ப நடைமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டித் தேர்வு மதிப்பெண் கட்-ஆப் / பதிவு மூப்பு தேதி கட்-ஆப் ஆகியன வகுப்பு வாரியாக அறிவிக்கப்படும். மற்றபடி இது வெறும் தகுதித் தேர்வு மட்டுமே!
6. இதிலிருந்து நேரடியாகப் பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியல்  தயாரிக்க முடியாது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடித்து வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வதுபோல தகுதித் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
அதற்குள் அரசு அறிவிக்கும் ஆசிரியர் பணிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ இந்தத் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். (தனியார் பள்ளிகளிலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் பணியில் இடம் பெற முடியும் என்பதுதான் இப்போதைய சட்டப்படியான நடைமுறை) அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க இத்தகுதி மதிப்பெண்கள் பயன்படும். பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வோ / பதிவு மூப்போ / வெயிட்டேஜ் மதிப்பெண்ணோ காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்பு வாரியான கட்-ஆப் அறிவிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
இப்படியான தகுதித் தேர்வுகள் பல ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படுகிறது. NET / SLET தேர்வுகளில் வெற்றி பெற்றோர் தான் கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றோ ராவர்.
அதேபோலத்தான் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு)ல் பெற்ற தேர்ச்சி பெற்றோர் தான் பள்ளி ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பெறுவதற்கு மட்டும்தான் TET பயன்படும்; பயன்படுத்தப்பட வேண்டும். மற்றபடி பணி நியமனத்திற்கும் TET-க்கும் நேரடித் தொடர்பே கிடையாது.
சரிங்க அப்படின்னாலும் TET-ல தகுதி மதிப் பெண் ணுக்கு மேலே தானே வேலை கொடுத்திருக்காங்க. தகுதி பெறாதவங்களையெல்லாம் வேலைக்கு எப்படி எடுக்க முடியும்? கல்வித்தரம் கெட்டுப் போயிடாதா? வேணும்னா அடுத்த வருசம் எழுதி தகுதிப்படுத்திக்க வேண்டியது தான்.
இந்த மாதிரிப் பிரச்சினையெல்லாம் NET/SLET-ன்னு சொன்னீங்களே அங்கேயெல்லாம் வருதா? என்று இந்த தகுதித் தேர்வில் தோல்வியடைந் தாகச் சொல்லப் படும் சிலரே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சரி, அப்படி தகுதியானவர்கள், தகுதியில்லாத வர்கள் என்று பிரித்துச் சொல்லும் மாபெரும் அளவுகோலான தகுதி மதிப்பெண் என்பது எவ்வளவு?
60 விழுக்காடு
அதாவது 100-க்கு 40 விழுக்காடு குறைவான மதிப்பெண் எடுத்தாலும் பரவாயில்லை அவர்கள் தகுதியு டையவர்கள் என்பது தானே உயர்ந்தபட்ச தகுதிக்கான அளவு கோல்!
ஆமாம். அதேதான்.
இந்த 60 விழுக்காடு மதிப்பெண் என்பது யார் யாருக்கு?
அனைவருக்கும்தான். அதிலென்ன சந்தேகம்?
அனைவருக்கும் எப்படி ஒரே அளவுகோல்? இந்திய அரசியல் சட்டத்தில் சமூகநீதி அடிப்படை யிலான தனித்தனி அளவுகோல்கள்தான் நிர்ணயிக்கப் பட வேண்டும். திறந்த போட்டிப் பிரிவினருக்குத்தானே 60 விழுக்காடு என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அப்படியெனில் பிற்படுத்தப்பட்டோருக்கு...? மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு...? தாழ்த்தப்பட்டோருக்கு...?
பழங்குடியினருக்கு...?
மாற்றுத் திறனாளிகளுக்கு...?
பார்வையற்றோர்களுக்கு...?
60, 60, 60, 60, எல்லோருக்கும் 60 விழுக்காடுதான், யாருக்கும் தனித்தனியாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட வில்லை.
இப்போது புரிகிறதா? பார்ப்பனர்கள் முதல் பார்வையற்றோர் வரை அனைவருக்கும் ஒரே அளவுகோல்! எப்படி இருக்க முடியும்? சமூக நீதியில் மோசடி என்றோமே அதன் அடிப்படை புரிகிறதா இப்போது? இதுவரை இந்தியாவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கவே முடியாது.
அரசியல் சட்டத்திற்கு விரோத மாக, உயர்நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை வழங்கியிருக்கும் எண்ணற்ற தீர்ப்புகளுக்கு மாறாக, இந்த தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான சட்டத்திற்கும் ஆணைக்குமே புறம்பாக இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது. திட்டமிட்ட சதி அரங்கேறியிருக்கிறது.
NCTE எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி ஆணைய விதிப்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தகுதித் தேர்வுகளை நடத்தி வகுப்புவாரியான தனித்தனியான கல்வி அளவுகோல்களை வெளியிட்டு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தந்திருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் மட்டும் வகுப்புவாரியான கட்-ஆப் மதிப்பெண்ணே கிடையாது என்று சமூகநீதிக்கும், அரசியல் சட்டத்திற்குமே எதிரான நிலைப்பாடு எப்படி எடுக்கப்பட்டது?
ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு என்று கேட்பதற் கான அடிப்படை வாய்ப்பையே இல்லாமல் செய்து, சமூகநீதிப்படி வேலை பெறும் தகுதிக்கான ஊற்றுக் கண்ணையே அடைத்தது யார்?
முன்னேறிய ஜாதியினரும், அனைத்து வாய்ப்புகளும் பெற்றவர்களே 40 விழுக்காடு குறைவாக 60 விழுக்காடு எடுத்திருந்தாலும் தகுதியானவர்கள்தான் என்னும்போது அவர்களை விட வாய்ப்புக் குறைந்த, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், பார்வையற்றோருக்கும் சமூகநீதிப்படி நிர்ண யிக்கப்பட வேண்டிய மதிப்பெண்கள் ஏன் நிர்ணயிக்கப்பட வில்லை? திறந்த போட்டியைத் தவிர 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வெற்றிருக்க வேண்டிய ஒடுக்கப்பட்டவர்களுக் கான இடங்கள் ஒட்டு மொத்தமாகப் பறிக்கப்பட்டுள்ளது இன்னும் விளங்கவில்லையா? இடஒதுக்கீடே வழங்கப்பட வில்லை என்பது புரியவில்லையா?
சட்டமும், நீதிமன்றமும் TET விசயத்தில் சொல்லியிருப் பவை என்ன? நடந்திருப்பது என்ன? நீதிமன்றம் குப்பையில் போடச் சொன்ன பட்டியலை வைத்துக் கொண்டு பணி நியமனம் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளிகள் யார்? நடந்துள்ள சதியின் விவரங்கள் நாளைய விடுதலையில்!
தோழர்களே, பாதிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இச்செய்தியைக் கொண்டு சேர்த்து விட்டீர்களா? அவர்களை ஒன்று திரட்டத் தயாராகி விட்டீர்களா?