சிவகங்கையில், மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று ஆய்வு செய்தார். இந்திரா காந்தி வீட்டு வசதி திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, கண்காணிப்பு குழுவினரிடம் கேட்டறிந்தார்.
பொதுவாக இந்த கூட்டத்தில் 12 பஞ்சாயத்து தலைவர்கள், 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பங்கேற்பார்கள். ஆனால் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 12 பஞ்சாயத்து தலைவர்கள், 4 எம்.எல்.ஏ.க்கள், காரைக்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின்மூலம், அளவிதாங்கன், கீழையூர் காலனி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
புரோக்கர்கள் மற்றும் இடைத்தரகர்களை தவிர்க்கவே “உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதிலும் குறுக்கீடுகள் இருக்கின்றன.
எனவே, அரசின் சலுகைகளை முழுமையாக பெறுவதை உறுதி செய்யும் வகையில், முதியோர் பென்ஷன், கிராமப்புற வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை அனுப்ப அரசு முடிவு செய்தது. கல்விக் கடன் திட்டத்தினால் நாடு முழுவதிலும் உள்ள ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள், என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment