
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்பிடி தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக இன்று ரெயில் மறியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தனர். இதையடுத்து மீனவ சங்கங்களுடன் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும் புதன் கிழமைக்குள் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். அதனை மீனவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
இதையடுத்து திட்டமிட்டபடி மீனவர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து தங்கச்சிமடம் வரை மீனவர்களும், பெண்களும் என சுமார் 5000 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது
No comments:
Post a Comment