ஏய்குருவி! சிட்டுக்குருவி!
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20 ஆம் நாள்உலக சிட்டுக்குருவி தினமாக அனுசரிக்கப்படுகின்றது. மனிதனுடன் நீண்ட காலமாக தொடர்புடையஒரு பறவையாக உள்ள சிட்டுக்குருவியானது உலகில் பலப்பகுதிகளில் காணப்பட்டாலும் இந்தியாஉள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் அழிவினை எதிர்நோக்குவதிலிருந்து மீட்டு பாதுகாக்கும்பொருட்டும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தும் பொருட்டும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
அண்மைக் காலமாகப் பரபரப்பாகவும் வேதனையாகவும்பேசப்பட்டுவரும் பொருளாக உள்ளது சிட்டுக்குருவி. அலைபேசி (செல்போன்) கோபுரத்தின் கதிர்வீச்சினால்சிட்டுக்குருவி யினம் அழிந்துவருவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. நீரிலிருந்துநிலத்தில் முதலில் காலூன்றிய ஊர்வனவற்றிலிருந்து ஒரு பக்கம் பறவைகளும் மற்றொரு பக்கம்பாலூட்டிகளுமாய்ப் பரிணாமம் அடைந்து தோன்றிய உயிரினங்களுள் சிட்டுக்குருவி பறவையினத்தில்பேசெரிடே என்னும் குடும்பத்தினைச் சார்ந்தவையாகும். இக்குடும்பத்தைச் சார்ந்த குருவிகளேஉண்மையான சிட்டுக்கள் என வழங்கப்படுகின்றன. இவை சிறிய உடலுடன் பழுப்பு நிறத்தில் குட்டையானவாலுடன் சக்திவாய்ந்த அலகுகளுடன் கூடிய உடலமைப்புடன் காணப்படும். உலகம் முழுவதிலும்பேசர் பேரினத்தின் கீழ் சுமார் 30 சிற்றினங்கள் காணப்படுகின்றன. இவை மனித இனத்துடன்நெருக்கமான உறவைக்கொண்டு மனித வாழிடங்களில் எவ்வித நெருடலும் இல்லாமல் வாழும் தகவமைப்பினைப்பெற்றுள்ளன. இத்தகவமைப்பே குறிப்பாக பேசர் டொமஸ்டிகஸ் (Passer domesticus) எனப்படும் சிட்டுக்குருவிகள் நமது வீடுகளில்நம்முடன் சகசமாய் வாழக்காரணமாக விளங்குகிறது.
உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும்இச் சிட்டுக்குருவி இனம் இந்தியாவிலும் மிகுதியாகக் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது இவ்வினம்பெருமளவில் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றன. இவ்வினம் அழிந்ததற்கான தெளிவான காரணங்கள்தெரியாத போதிலும் செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு முக்கியக் காரணமாகநம்பப்படுகின்றது. சிட்டுக்குருவியின் வாழிடம் பெருமளவில் அழிக்கப்பட்டதாலும், பயிர்பெருக்கத்திற்காகஅதிக அளவில் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லியினாலும் பாதிக்கப்பட்டு பெருமளவில்இன்று சிட்டுக்கள் காணமல் போயின.
எனவே இந்தியாவில் சிட்டுக்குருவியின்நடமாட்டத்தி னைக் காட்சிப்படுத்தும் பொருட்டு ”சிட்டிசன் ஸ்பாரோ” (Citizen Sparrow)எனும் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டு இணையம் வழியே தகவல் திரட்டப்பட்டு வருகின்றது.இக்கணம் வரை சுமார் 6000 பேர் 8500 இடங்களில் சிட்டுக்குருவிகள் உள்ளதைப்பதிவு செய்துள்ளனர்.உண்மையிலேயே இத்தகவல் இயற்கை ஆர்வலருக்கு மகிழ்ச்சியான ஒன்றாகும். இந்தியா முழுவதிலும்சிட்டுக்குருவிகள் காணப்படுவது பதிவாகிய போதிலும், இந்தியாவின் மையப்பகுதிகளில் மிகக்குறைந்தஅளவே பதிவாகி உள்ளன. தமிழகம் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக அளவில் இக்குருவிகள்காணப்படுகின்றன.
’சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதிதெரியுமா? என்னை விட்டுப் பிரிந்தக் கணவன் இன்னும் வீடு திரும்பல! எனத் தலைவி தன் துயரத்தினைச்சிட்டுக்குருவியி டம் பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர் போல சிட்டுக்குருவிநம்முடன் வாழ்வது இந்தச் சினிமா பாடல் மூலம் நாம் அறியலாம். மேலும் ஏ குருவி, குருவிகுருவி, சிட்டுக் குருவி, உன் சோடி எங்க? அதகூட்டுக்கிட்டு எங்கவிட்டத்தல வந்துகூடுகட்டு எனச் சிட்டுக்குருவியினைத் தலைவன் அழைப்பதிலிருந்தும் சிட்டுக்குருவி மனிதனுடன்நெருங்கி வாழ்ந்ததை நாம் உணரலாம்.
மனிதனுடன்ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக்குருவியினைப்பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும்அபரிதமாகக் காணப்படுகின்றன. கிராமங்களில்உள்ள வீடுகளில் தாழ்வாரங்கள், இறவாணங்களில் உள்ள சிட்டுக்குருவியின் கூட்டினைப் பற்றியவர்ணனைகளும் சங்க காலத்தில் பதிவாகியுள்ளன. சங்ககால மக்கள் இயற்கையைவிரும்பி வாழ்ந்ததோடு தம்முடைய இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவுச் செய்ததோடு இயற்கையைப்போற்றவும் செய்தனர். ஆனால் தற்காலத்தில் வெளிவரும் பாடல்களில் கூட இயற்கையைப் பற்றியவர்ணனைகள் குறைந்துவிட்டதாகச் சங்ககாலப் பாடல்களில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள்வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே மனிதனுடன் பன்னெடுங்கால தொடர்புடையஅமைதியான அன்பின் தன்மையினைப் போதிக்கும் இக்குருவியினத்தைக் காப்பது நமது கடமையன்றோ!
Dr.P.MARIAPPAN
Asst Professor
Department of Zoology
Rajah Serfoji Govt College
Thanjavur 613 005
TAMIL NADU
INDIA

No comments:
Post a Comment